செய்திகள்

சிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்

Published On 2018-07-11 11:31 IST   |   Update On 2018-07-11 11:31:00 IST
சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இ.சிகரெட் பிடிக்கவும் அனுமதி இல்லை. இருந்தும் சிலர் மறைவாக புகை பிடிக்கின்றனர்.

அதை தடுக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது. அதி தொழில் நுட்பம் வாய்ந்த 300 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் ரோட்டில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

உலகில் முதன் முறையாக கடந்த 1970-ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தான் புகையிலைக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் மூலம் அங்கு புகை பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்தது. #tamilnews

Tags:    

Similar News