செய்திகள்

பிரான்ஸ் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய பலே கைதி

Published On 2018-07-01 14:54 GMT   |   Update On 2018-07-01 17:20 GMT
திருட்டு வழக்கில் பிடிபட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #thieffleesFrenchjail #thieffleesbyhelicopter
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையில் தொடர்புடையவன் ரெடோயின் ஃபெய்ட்(46). அந்நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று  பின்னர் கைதான இவனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ரியூ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெயிட், 3 கைதிகள் துணையுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றான்.

அவன் வெளியே ஓடிவந்ததும் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவனை ஹெலிகாப்டரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பாரிஸ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவனை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரை புறநகர் பகுதியில் கண்டுபிடித்த போலீசார் ரெடோயின் ஃபெய்ட்-ஐ கைது செய்ய பாரிஸ் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டிலும் வெடிகுண்டால் சிறை சுவரை உடைத்து தப்பிச்சென்ற இவன் பின்னர் போலீசில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. #thieffleesFrenchjail #thieffleesbyhelicopter
Tags:    

Similar News