செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா

Published On 2018-06-26 14:12 IST   |   Update On 2018-06-26 14:12:00 IST
ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானியின் வலதுகரமாக இருந்துவந்த நிதி மந்திரி எக்லில் ஹக்கிமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். #Afghanfinanceministerresigns #EklilHakimi
காபுல்:

அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டு தலைமை தூதராக முன்னர் பதவிவகித்தவர் எக்லில் ஹக்கிமி. மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியை ஆப்கானிஸ்தானுக்கு பெற்று தருவதில் முக்கிய பங்காற்றிய இவரை தனது தலைமையிலான மந்திரிசபையில் நிதி மந்திரியாக பிரதமர் அஷ்ரப் கானி நியமித்தார்.

அஷ்ரப் கானியின் வலதுகரமாக இருந்துவந்த நிதி மந்திரி எக்லில் ஹக்கிமி ஆப்கானிஸ்தான் அரசில் பொருளாதார ரீதியில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு வழிநடத்தி சென்றார்.

இந்நிலையில், தனது நிதி மந்திரி எக்லில் ஹக்கிமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். நாளை (புதன்கிழமை) நான் நிதித்துறை அமைச்சகத்துக்கு செல்லும் கடைசி நாளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanfinanceministerresigns #EklilHakimi
Tags:    

Similar News