செய்திகள்

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் அதிபர் ரவுகானி திட்டவட்டம்

Published On 2018-06-26 08:35 GMT   |   Update On 2018-06-26 08:35 GMT
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்துள்ளார். #Rouhani #pressurefromTrump
டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அந்நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Rouhani #pressurefromTrump
Tags:    

Similar News