செய்திகள்

டோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

Published On 2018-06-16 04:42 GMT   |   Update On 2018-06-16 04:42 GMT
பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் வசித்த மக்கள் பீதி அடைந்தனர். #TongaEarthquake
சிங்கப்பூர்:

பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியாபு நகரில் இருந்து 470 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். #TongaEarthquake

Tags:    

Similar News