செய்திகள்

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

Published On 2018-06-02 19:50 GMT   |   Update On 2018-06-02 19:50 GMT
சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். #Syria USledairstrike

பெய்ரூட்:

சிரியா நாட்டின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர். பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர்.

இந்நிலையில், சிரியா நாட்டின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் கிராமத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 



இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Syria USledairstrike
Tags:    

Similar News