செய்திகள்

விசா கார்டில் தொழில்நுட்ப கோளாறு - பணப்பரிமாற்றம் செய்யமுடியாமல் ஐரோப்பிய மக்கள் தவிப்பு

Published On 2018-06-01 17:09 GMT   |   Update On 2018-06-01 17:09 GMT
ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விசா கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #VisaCard #VisaCardservicedisruption #Europe

லண்டன்:

விசா கார்டு என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை போலவே செயல்பட்டாலும், இவ்வட்டையைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக இதர கடன் அட்டைகளைப் போல பொருட்களை வாங்க முடியும். 

இவ்வட்டையை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும் என விசா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் மற்றைய நாடுகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விசா கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் எடுக்க முடியாமலும், பொருட்கள் வாங்க முடியாமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் விசா கார்டு சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.



இந்த தொழில்நுட்ப கோளாறினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு விசா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் பிரச்சனை குறித்து விசாரித்து வருவதாகவும், விரைவில் கோளாறு சரிசெய்யப்படும் எனவும் விசா நிறுவனம் தெரிவித்துள்ளது. #VisaCard #VisaCardservicedisruption #Europe
Tags:    

Similar News