செய்திகள்

ஏமனில் ஹவுதி படையினர் ஏவுகணை தாக்குதல் - பொதுமக்கள் பலர் உயிரிழப்பு

Published On 2018-05-22 05:01 GMT   |   Update On 2018-05-22 05:01 GMT
ஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக சவுதி அரசின் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.#Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
சனா:

ஏமன் நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

ஏமன் நாட்டின் அண்டை நாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா பயங்கரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள மரிப் நகரின் மீது ஹவுதி படை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
Tags:    

Similar News