செய்திகள்

இஸ்ரேலில் அயல்நாட்டினர் வெளியேற்றத்தை எதிர்த்து பேரணி

Published On 2018-03-25 12:46 IST   |   Update On 2018-03-25 12:46:00 IST
இஸ்ரேல் நாட்டில் அயல்நாட்டினர் வெளியேற்றுவதாக பிரதமர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்துககும் மேற்பட்டோர் ஒன்றுக்கூடி பேரணியில் ஈடுபட்டனர். #Israel
ஜெருசலேம்:

இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் பெரும்பான்மையான மக்களாக உள்ளனர். அங்கு ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் எரித் ரியாவைச் சேர்ந்த 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடிபெயர்ந்து வந்து தங்கி உள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற வேண்டும். இல்லையேல் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களை தடுக்க இஸ்ரேல்- எகிப்து எல்லையில் எலெக்ட்ரானிக் சுவர் எழுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நேற்று பேரணியும் போராட்டமும் நடந்தது. அதில் 20 ஆயிரத்துககும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் வாழும் யூதர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Israel

Similar News