செய்திகள்

காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்

Published On 2017-02-16 17:27 IST   |   Update On 2017-02-16 18:40:00 IST
காதலர்கள் தினத்தினை முன்னிட்டு இலங்கையின் சுகந்திர இசைக்கலைஞர்களில் பாடலாசிரியரான எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக் கலைஞனாக அறிமுகமாகும் “என் கண்ணம்மா” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளரான யஜீவன் இசையமைத்து பாடியுள்ள “என் கண்ணம்மா” பாடலில் கடந்த காலங்களில் பாடலாசிரியராக செயற்பட்டு வந்த எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக்கலைஞனாக அறிமுகமாகியுள்ளார்.
இப்பாடலின் இசைக்கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளதோடு, பாடலின் ஒளிப்பதிவினை பிரவீன் செய்துள்ளார். குறித்த பாடலினை கஜன் கே கலையமுதன் இயக்கியதோடு பாடலின் தொகுப்பாக்கம் பணியினையும் செய்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியான இப்பாடல் காதலில் ஏற்படும் சில உண்மை சம்பவங்களை வெளிப்படுத்தும் விதமாக கொஞ்சம் கோபம் நிறைய காதல் என்பதை மையப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் காணொளியில் டிலானி மற்றும் யஜீவன் நடித்துள்ளனர். இந்தப் பாடல் முற்றிலும் இளம் வயதினரின் படைப்பாகவுள்ளது சிறப்பம்சமாகும். மேலும், இப்பாடல் இந்தியாவின் பிரபலமான DIVO யூடியூப் அலைவரிசையில் வெளியிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News