செய்திகள்

மகள் இறந்த துக்கம் தாங்காமல் ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் மரணம்

Published On 2016-12-30 13:25 IST   |   Update On 2016-12-30 13:25:00 IST
மகள் இறந்த துக்கம் தாங்காமல் கடும் மனஉளைச்சல் காரணமாக நோய்வாய்ப்பட்ட ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் மரணம் அடைந்தார்.
ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் (84). இவர் 1950-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தார். சிங்கிங் இன் தி ரெயின், மற்றும் டேம்மி அன்ட் தி பேட்லர் ஆகிய படங்கள் இவர் நடித்ததில் பிரபலமானவை.

இவரது மகள் கேர்ரி பி‌ஷர். இவரும் ஒரு நடிகை ஆவார். ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். லண்டனில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் வந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

எனவே, மகளின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அவர் மிகவும் துக்கத்துடன் காணப்பட்டார். மிகவும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது.

உடனே அவரை லாஸ்ஏஞ்சல்சில் உள்ள கீடர்ஸ்-சீனால் மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இத்தகவலை அவரது மகன் டாட் பி‌ஷர் தெரிவித்தார்.

Similar News