செய்திகள்

வியட்நாம்: இரு பஸ்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 13 பேர் பலி

Published On 2016-05-22 15:13 IST   |   Update On 2016-05-22 15:13:00 IST
வியட்நாம் நாட்டின் பின்ஹ் துவாய் மாகாணத்தில் இன்று இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
ஹனாய்:

வியட்நாம் நாட்டின் பின்ஹ் துவாய் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று வேகமாக வந்த இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பின்னர் அவை இரண்டும் சேர்ந்து அருகாமையில் நின்றிருந்த ஒரு லாரியின் மீதும் மோதின. இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 13 பயணிகள் உடல்கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த சுமார் 40 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

படுமோசமான சாலைகள், சீரான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் ஆகியவற்றால் வியட்நாம் நாட்டில் சாலை விபத்துகள் என்பது சராசரியான அன்றாட நிகழ்வுகளில் இன்றாகி விட்டது. இங்கு தினம்தோறும் சாலை விபத்துகளில் மட்டும் சராசரியாக 35 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News