செய்திகள்

மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்

Published On 2019-04-15 09:47 IST   |   Update On 2019-04-15 09:47:00 IST
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 156 கோடியை செலவிட்டுள்ளது. #Facebook
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையை இருமடங்காக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு 22.6 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.156 கோடி) செலவிட்டுள்ளது.

மார்க் சூக்கர்பர்க் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு டாலர் எனும் மிகக்குறைந்த தொகையை வருவாயாக பெறுகிறார். 2017 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு ரூ.62 கோடி செலவிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

இதுதவிர தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தியதில் மார்க் சூக்கர்பர்க் ரூ.18 கோடி செலவிட்டிருக்கிறார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு சார்ந்த பிரச்சனையில் சிக்கியது முதல் அந்நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.



ஃபேஸ்புக்கின் மூத்த நிர்வாக அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் 2018 ஆம் ஆண்டு ரூ.164 கோடிகளை வருவாயாக பெற்றிருக்கிறார். முந்தைய ஆண்டில் இவர் ரூ.174 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தார். இதுதவிர நெட்ஃப்ளிக்ஸ் மூத்த அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் ஃபேஸ்புக்கின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியிருப்பதை தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து விலகுகிறார். ஃபேஸ்புக் நிறுவன நிர்வாக குழுவில் 2011 ஆம் ஆண்டு முதல் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றிருக்கிறார். #Facebook
Tags:    

Similar News