செய்திகள்

உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த மலாலாவுடன் கைகோர்க்கும் ஆப்பிள்

Published On 2018-07-14 11:54 GMT   |   Update On 2018-07-14 11:54 GMT
உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த மலாலா தொண்டு நிறுவனத்துடன் கைகோர்க்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. #MalalaYousafzai



உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மையங்கள் மலாலாவின் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள பத்து ஆப்பிள் டெவலப்பர்கள் மையம் மற்றும் மலாலா தொண்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் மலாலா உரையாற்றினார். 

அப்போது, ஆப்பிள் டெவலப்பர் மையத்திற்கு சென்று திரும்பியதும் நிதி உதவி மூலம் பாதுகாப்பு, தரமான கல்வியை பெண்களுக்கு இலவசமாக வழங்க இந்த நிதி உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

"நம் உலகை மேம்படுத்துவதில் ஆப்பிள் டெவலப்பர் மைய மாணவர்கள் எனது ஆசையை நிறைவேற்றுவார்கள், அவர்களின் வித்தியாச கற்பனை மூலம் பிரேசில் மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் பெண்களுக்கு உதவ முடியும்," என மலாலா தெரிவித்துள்ளார்.



"ரியோ முதல் ரியாத் வரை ஒவ்வொரு பெண் குழந்தையும் தங்களது எதிர்காலத்தை சொந்தமாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கை," என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஆப்பிள் மற்றும் மலாலா தொண்டு நிறுவனம் இணைந்து இந்தியா மற்று லத்தீன் அமெரிக்காவில் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்தன. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளன. 

"பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க செய்வதில் மலாலாவின் கனவை நிறைவேற்றுவதில் மலாலா தொண்டு நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது," என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். #MalalaYousafzai 
Tags:    

Similar News