செய்திகள்

ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 ஸ்மார்ட்போன்: ஆகஸ்டு 10-இல் வெளியாகும் என தகவல்

Published On 2017-08-06 19:08 IST   |   Update On 2017-08-06 19:08:00 IST
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீயோல்:

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய எல்ஜி Q6 சார்ந்த டீசர் புகைப்படம் அந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

புதிய டீசர் புகைப்படத்தில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எல்ஜி Q6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  



முன்னதாக எல்ஜி Q6 ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் விஷன் 18:9 டிஸ்ப்ளே 2160x1080 பிக்சல் ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த UX 6.0 யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது.  

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, வைடு-ஆங்கிள் சென்சார், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி, எல்டிஇ, வைபை. ப்ளூடூத், யுஎஸ்பி டைப் 2.0 போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Similar News