தமிழ்நாடு செய்திகள்

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி- ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2024-12-05 11:53 IST   |   Update On 2024-12-05 13:54:00 IST
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குலாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • விபத்து ஏற்பட்ட குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித் தரப்படும்.

சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குலாப் (22) என்பவர் மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென 4-வது மாடியில் இருந்து பால்கனி மேற்கூரை இடிந்து அவர் தலை மீது விழுந்தது.

இந்த விபத்தில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை மீட்டு, அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்ட குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News