தமிழ்நாடு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான கல்லூரி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்

Published On 2025-10-07 16:59 IST   |   Update On 2025-10-07 16:59:00 IST
  • இன்ஸ்டாகிராம் மூலும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
  • பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியன் வன்கொடுமை.

திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (வயது 28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவியுடன் பழகி வந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

அந்த மாணவியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா? என கல்லூரி மாணவி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி வைகை அணைக்கு மாணவியை வரவழைத்துள்ளார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதன் பிறகு மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அவரிடம் கேட்டபோது, தட்டிக் கழித்தார்.

இதனால் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது அவரது பெற்றோர்களும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் கூறி உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த ஜோஸ் மரியராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News