தமிழ்நாடு செய்திகள்

பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை- உயர்நீதிமன்றம் அதிரடி

Published On 2025-06-20 17:25 IST   |   Update On 2025-06-20 17:25:00 IST
  • விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு வலியுறுத்தல்.
  • கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியதாக உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், "பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை.

திருமணமாகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை

கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது" என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News