தமிழ்நாடு செய்திகள்

வார இறுதி நாட்கள்: சென்னை- நெல்லை இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

Published On 2025-06-17 16:09 IST   |   Update On 2025-06-17 16:09:00 IST
  • 21ஆம் தேதி சனிக்கிழமை எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.
  • 22ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஜூன் 21ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45-க்கு நெல்லை சென்றடையும்.

ஜூன் 22 ஆம்தேதி (ஞாயிறு) நெல்லையில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News