தமிழ்நாடு செய்திகள்

தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் - அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதில்

Published On 2025-05-05 13:57 IST   |   Update On 2025-05-05 13:57:00 IST
  • இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை
  • சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், "இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

"மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

இது தொடர்பான செய்தி துணுக்கை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள்.

இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். 'வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்" என்கிறோம். "இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை' என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News