தமிழ்நாடு

தொடரும் மீட்பு பணிகள்.. நாளையும் விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2024-12-05 18:19 IST   |   Update On 2024-12-05 18:19:00 IST
  • தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மற்றும் அடுத்து வரும் சனி, ஞாயிறு கிழமைகளிலும் மீட்பு பணிகள் நடைபெறும் என்பதால், திங்கள் கிழமை (டிசம்பர் 09) முதள் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News