கரூர் கூட்ட நெரிசல்: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை- பிரசார பயணத்தை ஒத்திவைக்க விஜய் திட்டம்?
- த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
- விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் கைதாவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.