தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் - விஜய் அறிவிப்பு

Published On 2025-07-16 09:59 IST   |   Update On 2025-07-16 09:59:00 IST
  • என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
  • வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.

நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News