துணைவேந்தர் நியமனம் விவகாரம்: இடைக்கால தடை விதித்திருப்பது திட்டமிட்ட ஏற்பாடு- கி.வீரமணி
- ‘உலகெங்கும் கலைஞர்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- நூலை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார்.
'உலகெங்கும் கலைஞர்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சென்னை வளர்ச்சி கழகம் சார்பில் சட்டக் கதிர் ஆசிரியர் எழுதிய இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, திராவிடர் கழக தலைவர் வீரமணி நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
துணைவேந்தர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது, திட்டமிட்ட ஏற்பாடு.
முறையற்ற அரசியல் எனவும் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் விரோதமாக 2 பேர் திட்டமிட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தைவிட உயர்நீதிமன்றம் உயர்ந்தது என்ற தவறான சட்ட விரோதமான ஒரு தடை யானை கொடுக்கப்பட்டு உள்ளது. அவசரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல.
அந்த வழக்கை குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரித்து கடைசி நாளில் தடை வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மாலை 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வோம் என்று சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
முற்றிலுமாக நீதிபதிகளின் போக்கு கெட்ட எண்ணத்தில் ஆனது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தமிழகத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கத்தை ஒரு வாரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என சொல்லுவது, நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செயல்படுவோம் என்பது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.