தமிழ்நாடு செய்திகள்

கட்டிப்பிடிப்பது தமிழர் கலாசாரம் இல்லை: விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் - வேல்முருகன்

Published On 2025-06-12 08:38 IST   |   Update On 2025-06-12 08:38:00 IST
  • நான் பேசியதில் என்ன தவறு உள்ளது என்பதை விஜய் என்னுடன் அமர்ந்து நேரடியாக கேள்வி கேட்கட்டும்.
  • அரசியல் ஆதாயத்திற்காக விஜய் திட்டமிட்டே கல்வி நிகழ்ச்சியை நடத்துகிறார்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வயதுக்கு வந்த பெண்ணை தந்தை உள்ளிட்ட எந்த உறவும் மடியில் உட்கார வைக்கவோ, கட்டிப்பிடிக்கவோ மாட்டோம். கட்டிப்பிடிப்பது தமிழர் கலாசாரம் இல்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் நீங்கள் அழைத்து வந்த பெண்கள், பெற்றோர்களை கொச்சைப்படுத்தியதற்கு நீங்கள்தான் என்னிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் பேசியதில் என்ன தவறு உள்ளது என்பதை விஜய் என்னுடன் அமர்ந்து நேரடியாக கேள்வி கேட்கட்டும், அதில் அவர் தன்னை புண்படுத்தியுள்ளது குறித்து கூறட்டும். ஆனால் ஏன் அதற்கு அவர் முன்வரவில்லை.

நான் சொன்ன முத்தமிடும் காட்சி விஜய் குறித்தோ, கல்வி நிகழ்ச்சி குறித்தோ கூறவில்லை. எத்தனையோ பேர் நூற்றுக்கணக்கான மக்களுக்கு நிதி உதவி தந்து கல்விக்கு உதவுகின்றனர். அவர்கள் இதுபோன்று கல்வி நிகழ்ச்சி நடத்துகின்றனரா?. அரசியல் ஆதாயத்திற்காக விஜய் திட்டமிட்டே கல்வி நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News