தமிழ்நாடு செய்திகள்
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
- வீராணம் ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 1337 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி உள்ளது.
மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.