தமிழ்நாடு செய்திகள்

யுகாதி 2025: தெலுங்கு, கன்னட மொழி பேசுவோருக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

Published On 2025-03-30 09:30 IST   |   Update On 2025-03-30 09:30:00 IST
  • மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒன்று யுகாதி பண்டிகை. இது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தெலுங்கு வருட பிறப்பின் முதல் நாள் யுகாதி பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்று்ம பலர் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோருக்கு யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News