தமிழ்நாடு செய்திகள்
பா.ஜ.க. என்பது பாசிச ஆட்சி, அ.தி.மு.க. என்பது அடிமை மாடல் ஆட்சி - உதயநிதி ஸ்டாலின்
- பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
* சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜெண்டே போட முடியாத நிலை உள்ளது.
* பூத் முகவர்கள் பயிற்சி கூட்டத்தையே மாநாடு போல நடத்தி உள்ளோம்.
* பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள்.
* பா.ஜ.க. ஆட்சி என்பது பாசிச ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி என்பது அடிமை மாடல் ஆட்சி.
* அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
* பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் புதுமைப்பெண் திட்டம்.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.