தமிழ்நாடு செய்திகள்
'தமிழ்நாடு' இருக்கும் வரை 'அண்ணா'வே நம்மை ஆள்கிறார் - உதயநிதி
- தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',
- பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜனநாயகப் பேரதிசயம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',
பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',
எண்ணம் - பேச்சு - எழுத்து - செயல் அனைத்திலும் தமிழின முன்னேற்றம் ஒன்றே என்ற 'கட்டுப்பாடு',
இவையே நம் அண்ணா!
'தமிழ்நாடு' இருக்கும் வரை 'அண்ணா'வே நம்மை ஆள்கிறார்.
அண்ணா- கலைஞர் வழியில் கழகத்தலைவர் @mkstalin தலைமையில் மீண்டும் கழக அரசை அமைத்திட இந்நாளில் உறுதியேற்போம்.
வாழ்க அண்ணா!
வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.