தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி கணக்குகளை 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் - த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2024-12-06 22:04 IST   |   Update On 2024-12-06 22:21:00 IST
  • என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
  • எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கூட்டணி கணக்குகளை 2026 ஆம் ஆண்டு மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்."

"கடைசியாக ஒரு விஷயம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் இன்று வரமுடியாமல் ஆகிவிட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போ சொல்கிறேன். அவரின் மனம் முழுமையாக இன்று நம்மோடு தான் இருக்கும்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News