தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அரசு இப்போது sorry-மா மாடல் அரசாக மாறிவிட்டது - விஜய்

Published On 2025-07-13 11:09 IST   |   Update On 2025-07-13 11:12:00 IST
  • தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்?

சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று த.வெ.க.வினர் முழக்கமிட்டனர்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 24 பேரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா?

* திருப்புவனம் அஜித்தை தவிர லாக்அப் மரணமடைந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் sorry சொல்லாதது ஏன்?

* அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்?

* தி.மு.க. அரசு இப்போது sorry-மா மாடல் அரசாக மாறிவிட்டது 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News