தமிழ்நாடு செய்திகள்

RSS-ன் கைப்பாவையாக செயல்படும் CBI - பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த விஜய்

Published On 2025-07-13 11:30 IST   |   Update On 2025-07-13 11:37:00 IST
  • அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?
  • ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.

சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைப்பாவையாக உள்ளது.

* அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?

* சாத்தான்குளம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கு அவமானம் இல்லையா?

* ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

Similar News