நாகை மாவட்ட பிரச்சனைகளை பட்டியலிட்ட விஜய்
- நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா?
- என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
* நாகை மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, வேதாரண்யம் உப்பு ஏற்றுமதியை வளர்த்தெடுக்கவில்லையே ஏன்?
* நாகையில் மூடப்பட்ட ரெயில் பெட்டி தொழிற்சாலையை திறந்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* தஞ்சை, நாகை சாலை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, அதை ஏன் முடிக்கவில்லை.
* நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா?
* உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வர வேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன்.
* அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
* அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது?
* பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
* என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.