தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை: 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை வெளியிட்டார் விஜய்

Published On 2025-07-30 11:59 IST   |   Update On 2025-07-30 12:03:00 IST
  • ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைவமைப்பு.
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.

2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையிலும், ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந் நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார். கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார் விஜய். 




Tags:    

Similar News