தமிழ்நாடு செய்திகள்

விஜய் தலைமையில் த.வெ.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2025-07-04 11:35 IST   |   Update On 2025-07-04 11:35:00 IST
  • கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
  • மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க உள்ளார்.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கிது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க உள்ளார்.

த.வெ.க. சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க.வின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.

Tags:    

Similar News