தமிழ்நாடு செய்திகள்
பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது தவெக புகார்
- விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார்
- தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இந்நிலையில், விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.