தமிழ்நாடு செய்திகள்

ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

Published On 2025-09-30 19:10 IST   |   Update On 2025-09-30 19:10:00 IST
  • ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டார்.
  • கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனே அதை நீக்கினார்.

சென்னை:

த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டு அதை நீக்கினார். நேபாளத்தில் நடந்த ஜென் இசட் போராட்டம் போல இங்கும் நிகழும். அதுவே ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனே அதை நீக்கினார்.

இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News