தமிழ்நாடு செய்திகள்

ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாதா?- தமிழக அரசு விளக்கம்

Published On 2025-07-05 08:07 IST   |   Update On 2025-07-05 08:07:00 IST
  • ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை.

சென்னை:

தஞ்சை மக்களே ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News