தமிழ்நாடு செய்திகள்

'முதல்வர் படைப்பகம்' மத்திய அரசின் திட்டமா?- தமிழக அரசு விளக்கம்

Published On 2024-10-29 08:28 IST   |   Update On 2024-10-29 08:28:00 IST
  • பல்வேறு தொழில்முனைவோர் ஒரே இடத்தில் பணிபுரியும் தளம், படிப்பதற்கு ஒரு தளம், உணவு சாப்பிடுவதற்கு ஒரு தளம் கட்டப்பட்டு உள்ளது.
  • தமிழக அரசின் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்' திட்டங்களின் நிதி உதவியுடன் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.

சென்னை:

தமிழக அரசு அறிவித்துள்ள 'முதல்வர் படைப்பகம்' மத்திய அரசின் திட்டம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.

இது திரிக்கப்பட்ட தகவல் என்று தெரிவித்துள்ளது. 'முதல்வர் படைப்பகம்' சென்னை கொளத்தூரில் முதலமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில்முனைவோர் ஒரே இடத்தில் பணிபுரியும் தளம், படிப்பதற்கு ஒரு தளம், உணவு சாப்பிடுவதற்கு ஒரு தளம் கட்டப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே இடத்தில் பணிபுரியும் திட்டம் என்பது மத்திய அரசின் 'ஸ்டார்ட்-அப் இந்தியா' மற்றும் தமிழக அரசின் 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்' திட்டங்களின் நிதி உதவியுடன் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News