தமிழ்நாடு செய்திகள்

பதவி பற்றி எனக்கு கவலை இல்லை.. மக்கள் பிரச்சினைதான் முக்கியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-26 19:00 IST   |   Update On 2025-01-26 19:00:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
  • டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பாக திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினர்.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தான நிலையில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.

அப்போது அவர் உரையாற்றியதாவது:-

மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது.

டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திறகு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை.

மக்களின் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கும்போது இங்கேயே நிற்கலாம் போல உள்ளது.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் தான்.

மக்களுக்கு விரோதமான செயல்களை மத்திய பாஜக அரசு செய்கிறது. தமிழக அரசின் அனுமதியின்றி ஏலம் நடத்த மத்திய அரசு இயற்றியது.

விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் டங்ஸ்டன் போராட்டம் 3 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அதிமுக பேசவில்லை. டங்ஸ்டன் திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தோம்.

டங்ஸ்டன் விவகாரத்தில் நமக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி. இதை நான் அரசியல் பிரச்சினையாக பார்க்கவில்லை, நமது பிரச்சினையாக பார்க்கிறேன்.

பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை.

டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News