தமிழ்நாடு செய்திகள்
நவீனமயமாக்கப்பட்ட திரு.வி.க. பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழக முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கை திறந்து வைத்தார்.
- பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.7.50 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.