தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு

Published On 2025-07-03 18:53 IST   |   Update On 2025-07-03 18:53:00 IST
  • திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடக்கிறது.
  • தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்தநிலையில் "திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 5 முதல் 8ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும்" என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News