தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை மட்டுமே வி.சி.க. நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் - திருமாவளவன்

Published On 2025-04-20 13:30 IST   |   Update On 2025-04-20 15:34:00 IST
  • தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும்.
  • தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

* கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது.

* ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை.

* அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை.

* தி.மு.க.வை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

* தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும்.

* தி.மு.க. கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்தகளை சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.

* எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.

* தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

Similar News