தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி விவகாரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்- திருமாவளவன்

Published On 2024-12-07 14:10 IST   |   Update On 2024-12-07 14:10:00 IST
  • அம்பேத்கர் எங்களுக்கு வணிகப்பொருள் அல்ல, எங்களுக்கான கருத்தியல் அடையாளம்.
  • நமது சுயமரியாதையை எவனும் குறைத்து மதிப்பிட முடியாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

* கூட்டணி விவகாரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

* கூட்டணி விவகாரத்தில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம்.

* அங்கே சென்றால் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று தாவுபவர்கள் நாங்கள் அல்ல.

* அங்கே போனால் அள்ளலாமா என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. கூட்டணி விவகாரத்தில் விசிக-விற்கு பேராசை கிடையாது.

* அம்பேத்கர் எங்களுக்கு வணிகப்பொருள் அல்ல, எங்களுக்கான கருத்தியல் அடையாளம்.

* அரசியல் அதிகாரத்தின் மூலம் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியம்.

* தொண்டர்களுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்பட்டு விடக்கூடாது.

* நமது சுயமரியாதையை எவனும் குறைத்து மதிப்பிட முடியாது.

* கருத்தியல் களத்தில் உறுதியாக இருக்கிறோம்.

* நாம் பின்வாங்குவதாக, தடுமாறுவதாக கூறுகிறார்கள். ஆனால் நாம் கருத்தியல் களத்தில் உறுதியாக இருக்கிறோம்.

* நம்பை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் நம் சுயமரியாதையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறினார்.

Tags:    

Similar News