தமிழ்நாடு செய்திகள்

சாதிய பாகுபாடு இல்லை...! மதுரை சித்திரை திருவிழாவிற்கு நீதிபதிகள் பாராட்டு

Published On 2025-05-15 16:55 IST   |   Update On 2025-05-15 16:55:00 IST
  • மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
  • திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.

மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.

இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.

அப்போது, இஸ்லாமியர்கள் பலர் பக்தர்களுக்கு சாதி, மத பாகுபாடு இன்றி நீர், மோர், உணவு வழங்கினர்.

இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

அதன்படி" வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது.

மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே.

மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.

திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.

திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டனர்.

Tags:    

Similar News