தமிழ்நாடு செய்திகள்

கத்தியுடன் சுற்றிய நபர்..! த.வெ.க. விளக்கம்

Published On 2025-06-23 22:15 IST   |   Update On 2025-06-23 22:15:00 IST
  • அந்த நபருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
  • கழகத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சுரேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த என்.தபரேஷ் என்பவர் கடந்த 15 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை தோளில் போட்டுக்கொண்டு, கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இவரைப் பற்றி விசாரித்த போது, இவர் ஒரு மாற்றுக்கட்சியில் பயணித்தவர் என்பதும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இவருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதும், கழகத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

எனவே மேற்கண்ட நபருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதைத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News