தமிழ்நாடு செய்திகள்
null
அமலாக்கத்துறையிடம் இருந்து அமைச்சர்களை பாதுகாக்கவே இரும்புக்கரம்- த.வெ.க., கண்டனம்
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மற்றுமொரு சாட்சி.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே அதிர செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மற்றுமொரு சாட்சி.
நண்பரை அரிவாளால் வெட்டி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே அதிர செய்துள்ளது.
தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்புதர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
அமலாக்கத்துறையிடம் இருந்து அமைச்சர்களை பாதுகாக்கவே இரும்புக்கரம் பயன்படுகிறது.
கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்தால் தமிழ்நாட்டில் காவல் துறை இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.