தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பல கோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-11-23 14:55 IST   |   Update On 2024-11-23 14:55:00 IST
  • மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை தமிழ் சமுதாயம் கொண்டாடும்.
  • அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஆளுமையாக இருந்தார் கருணாநிதி.

கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா இறுதிப் போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞர் 100 வினாடிவினா போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை தமிழ் சமுதாயம் கொண்டாடும்.

தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார்.

பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி பாராளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் தங்கை கனிமொழி.

பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்க வேண்டும். உண்மை வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஆளுமையாக இருந்தார் கருணாநிதி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News