பா.ஜ.க.வுடன் கூட்டணியா... கூட்டணி ஆட்சியா... தம்பிதுரை விளக்கம்
- தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை.
- காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களும் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை.
சென்னை:
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிய விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது தம்பிதுரை கூறியதாவது:-
* வரும் தேர்தலில் வென்றால் அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.
* தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை. இனியும் நடக்கப்போவதில்லை. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களும் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் இல்லை, இனிமேலும் இல்லை. வரும் 2026 தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி போட்டியிட்டு அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.
* திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. பொதுக்குழு செயற்குழுவை கூட்டித்தான் முடிவு செய்யப்படும் என்றார்.
இதனிடையே, அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பிறகு பார்க்கலாம் என்று கூறினார்.