தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது
- அண்ணா சாலையில் பகுதி நேர ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆசிரியர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
சென்னை அண்ணா சாலையில் பகுதி நேர ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து, சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து போராட வந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.